வரும்,
2014ம் ஆண்டுக்கு பின், கோர்ட் மூலமே, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்
பெறும் நிலை ஏற்படும் என, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பிறப்பு,
இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றுகளை பெற, பதிவு
செய்யாதவர்கள், ஓராண்டுக்குள் உரிய ஆவணங்களை கொடுத்து சான்றிதழ் பெறுவது
நடைமுறையில் உள்ளது. இறப்பு சான்றிதழை பொறுத்தவரை, பதிவு செய்யத்
தவறியவர்கள், ஓராண்டுக்கு பின், தாலுகா அலுவலகங்களில், என்.ஓ.சி., பெற்று,
கோர்ட் மூலம் பெற முடியும். என்.ஓ.சி., பெறுவதற்காக, தினமும் தாலுகா
அலுவலகத்திற்கு ஏராளமானோர் அலைய வேண்டிய நிலை உள்ளது.சுகாதாரத் துறை
அலுவலர் ஒருவர் கூறியதாவது:தற்போது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் முக்கிய
ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. சரியான முறையில் பதிவு இருந்தால், ஓரிரு
நாளில் பெறலாம். உள்ளாட்சி அமைப்புகளில், 1950 முதல், 2014 வரை உரிய
ஆவணங்கள் கொடுத்து, பெயர்களுடன், பிறப்பு சான்று பெறலாம். 2014ம் ஆண்டுக்கு
பின், கோர்ட் மூலம் மட்டுமே, இந்த சான்றிதழை பெற முடியும். இதற்கான ஆணையை
சுகாதாரத் துறை சமீபத்தில் பிறப்பித்துள்ளது.இப்பிரச்னையைத் தவிர்க்க,
தங்கள் குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்யாத பெற்றோர், உரிய ஆவணங்களுடன்
பதிந்து சான்றிதழ்களை தற்போதே பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-
-நமது நிருபர்-
No comments:
Post a Comment